Monday, November 20, 2006

சிக்கெனப் பிடிப்பாய்...


சிக்கெனப் பிடிப்பாய...
பாடல்: சைதை முரளி


சிக்கெனப் பிடிப்பாய் என் சோணாசலா
பக்கத்துணை என்றும் நீயே அருணாசலா
(சிக்கெனப்)

சுந்தரரை தடுத்தாண்ட சந்திரசேகரா
இந்த நாயேனையும் தடுத்தாட்கொள்ள வருவாயப்பா
(சிக்கெனப்)

கிரிவலம் வரவே கிருபை கூர்ந்தருள்வாய்
மலைமருந்தாய் என் மனத்தில் ஒளிர்வாய்
செக்கெனச் சுற்றிவரும் ஊழ்வினைகளும்
நீ என் புக்ககம் புகுந்தால் ஓடிடாதோ?
(சிக்கெனப்)

பெயர் நினைத்திடவே ரமணனைப் படை(பிடி)த்தாய்
நான் யார் என்னும் தத்துவம் ஈந்தாய்
அருணாசலம் எனவே அகத்தினில் நினைந்தோம்
சோணாசலனே எம்முள் சோதியுரு ஏற்றுவாய்
(சிக்கெனப்)

No comments: